முல்லைத்தீவு வற்றாப்பளையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்றையதினம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் செந்தமிழ் விளையாட்டு கழக புலம்பெயர் உறவுகள் கிராம மக்களின் நிதி அனுசரணையில் 12 வது வருடமாக நடாத்துகின்ற மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியானது நேற்றையதினம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது .
விறுவிறுப்பான முறையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கோயில் குடியிருப்பு யங்கஸ் அணி மற்றும் மாத்தளன் அம்பலவன் பொக்கணை ஒற்றுமை அணி மோதின கடும் போட்டியுடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யங்கஸ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடக் கிண்ணத்தை கைப்பற்றியது.
இரண்டாம் இடத்தை மாத்தளன் அம்பலவன் பொக்கணை ஒற்றுமை அணியும், மூன்றாம் இடத்தை வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் கைப்பற்றியது.
போட்டியில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக சர்மிலன் (யங்கஸ்), சிறந்த கோல் காப்பாளர் – யங்கஸ், மக்கள் மனம் கவர் வீரர் மற்றும் தொடரின் ஆட்ட நாயகனாக பகலவன் (மாத்தளன் அம்பலவன் பொக்கணை),சிறந்த நன்னடத்தை வீரர் கனி,
சிறந்த பின்கள வீரர் கிருஷாந், முதலாம் இடம் பெற்ற அணிக்கு 100,000 ரூபாவும் வெற்றிகிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 75,000 ரூபாயும் கிண்ணமும் , மூன்றாம் இடத்துக்கு 25,000 ரூபாயும் கிண்ணமும் வழங்கப்பட்டன. மேலும் இரணைப்பாலை சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் தொடரின் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கும், மருத்துவத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. இளம் தலைமுறையின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய கௌரவிப்புகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கழகத்தின் தலைவர் ச.சதீஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணி தனஞ்சயன், சிறப்பு விருந்தினராக முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி தலைவர் குறிஞ்சிக்குமரன் மற்றும் முல்லை உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் டிலான் , ஓய்வு நிலை அதிபர் சிவராசா, குமாரையா அறக்கட்டளை இயக்குநர் மகேந்திரன், கெளரவ விருந்தினர்களாக வற்றாப்பளை கிராம சேவையாளர் கரிகாலன், கரைதுறைபற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் தேசிந்தன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான யூட்பிரசாந் , ஜெகதீஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விஜிந்தன் மற்றும் மதகுருமார்கள் , பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் , கிராம மக்கள், உதைபந்தாட்ட பிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் சொந்த நிதியில் இருந்து செந்தமிழ் விளையாட்டு கழகத்திற்கு அன்பளிப்பு பணமாக 50 ஆயிரம் ரூபாவினை முல்லைத்தீவு மாவட்ட பொதுஜன பெரமுனவின் இணைப்பாளர் லக்சன் செந்தமிழ் விளையாட்டு கழக தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உதைபந்தாட்ட இறுதி போட்டியில் புதுவருட கிண்ணத்தை தமதாக்கிய யங்கஸ் அணி முல்லைத்தீவு வற்றாப்பளையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்றையதினம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பான முறையில் சிறப்பாக நடைபெற்றது.சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் செந்தமிழ் விளையாட்டு கழக புலம்பெயர் உறவுகள் கிராம மக்களின் நிதி அனுசரணையில் 12 வது வருடமாக நடாத்துகின்ற மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியானது நேற்றையதினம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது . விறுவிறுப்பான முறையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கோயில் குடியிருப்பு யங்கஸ் அணி மற்றும் மாத்தளன் அம்பலவன் பொக்கணை ஒற்றுமை அணி மோதின கடும் போட்டியுடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யங்கஸ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடக் கிண்ணத்தை கைப்பற்றியது.இரண்டாம் இடத்தை மாத்தளன் அம்பலவன் பொக்கணை ஒற்றுமை அணியும், மூன்றாம் இடத்தை வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் கைப்பற்றியது.போட்டியில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக சர்மிலன் (யங்கஸ்), சிறந்த கோல் காப்பாளர் – யங்கஸ், மக்கள் மனம் கவர் வீரர் மற்றும் தொடரின் ஆட்ட நாயகனாக பகலவன் (மாத்தளன் அம்பலவன் பொக்கணை),சிறந்த நன்னடத்தை வீரர் கனி,சிறந்த பின்கள வீரர் கிருஷாந், முதலாம் இடம் பெற்ற அணிக்கு 100,000 ரூபாவும் வெற்றிகிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 75,000 ரூபாயும் கிண்ணமும் , மூன்றாம் இடத்துக்கு 25,000 ரூபாயும் கிண்ணமும் வழங்கப்பட்டன. மேலும் இரணைப்பாலை சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் தொடரின் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.இந்த நிகழ்வின் போது, 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய மூன்று மாணவர்களுக்கும், மருத்துவத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. இளம் தலைமுறையின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய கௌரவிப்புகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.கழகத்தின் தலைவர் ச.சதீஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணி தனஞ்சயன், சிறப்பு விருந்தினராக முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி தலைவர் குறிஞ்சிக்குமரன் மற்றும் முல்லை உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் டிலான் , ஓய்வு நிலை அதிபர் சிவராசா, குமாரையா அறக்கட்டளை இயக்குநர் மகேந்திரன், கெளரவ விருந்தினர்களாக வற்றாப்பளை கிராம சேவையாளர் கரிகாலன், கரைதுறைபற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் தேசிந்தன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான யூட்பிரசாந் , ஜெகதீஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விஜிந்தன் மற்றும் மதகுருமார்கள் , பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் , கிராம மக்கள், உதைபந்தாட்ட பிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் சொந்த நிதியில் இருந்து செந்தமிழ் விளையாட்டு கழகத்திற்கு அன்பளிப்பு பணமாக 50 ஆயிரம் ரூபாவினை முல்லைத்தீவு மாவட்ட பொதுஜன பெரமுனவின் இணைப்பாளர் லக்சன் செந்தமிழ் விளையாட்டு கழக தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.