• Aug 26 2026

ஒரே வீட்டில் இருவருடனும் வாழ விரும்பிய பெண்!

Ziya / Aug 25th 2026, 3:47 pm
image

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தில், கணவருடனும் காதலனுடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாக பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த சுபம் வர்மா – அஞ்சு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதல் உறவாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுபமுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அஞ்சு அந்த உறவை கைவிட மறுத்துள்ளார்.


கணவரின் எதிர்ப்பையும் மீறி நிதினை வீட்டிற்கு அழைத்து வந்ததால், கணவன்–மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து சுபம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


போலீசார் கணவன், மனைவி மற்றும் நிதின் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது சுபம், “என்னுடன் இருக்க வேண்டும் அல்லது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடனும் சேர்ந்து வாழ முடியாது” என்ற நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.


அஞ்சு, தனக்கு கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்; இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


இதையடுத்து போலீசார் மூவரிடமும் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்வு காண முயன்றனர்.


ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.


அஞ்சு தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும், கணவர் சுபம் மற்றும் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இறுதியில் உடன்பாடு ஏற்படாததால், மூவரையும் போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவம் தற்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


ஒரே வீட்டில் இருவருடனும் வாழ விரும்பிய பெண் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தில், கணவருடனும் காதலனுடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாக பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த சுபம் வர்மா – அஞ்சு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதல் உறவாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுபமுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அஞ்சு அந்த உறவை கைவிட மறுத்துள்ளார்.கணவரின் எதிர்ப்பையும் மீறி நிதினை வீட்டிற்கு அழைத்து வந்ததால், கணவன்–மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சுபம் போலீசில் புகார் அளித்துள்ளார்.போலீசார் கணவன், மனைவி மற்றும் நிதின் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுபம், “என்னுடன் இருக்க வேண்டும் அல்லது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடனும் சேர்ந்து வாழ முடியாது” என்ற நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.அஞ்சு, தனக்கு கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்; இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீசார் மூவரிடமும் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்வு காண முயன்றனர்.ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.அஞ்சு தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும், கணவர் சுபம் மற்றும் நிதின் ஆகிய இருவருடனும் தொடர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இறுதியில் உடன்பாடு ஏற்படாததால், மூவரையும் போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தற்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement