கோவில் ஒன்றில் ஆயுத பூஜை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென நுழைந்துள்ளது.
கோயம்புத்தூர் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் ஆயுத பூஜைக்காக பக்தர்கள் திரண்டிருந்தனர். பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒற்றைக் காட்டு யானை கோவிலுக்குள் புகுந்தது.
குறித்த யானை உணவு தேடி கோவிலுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூஜையின் போது திடீரென யானை நுழைந்ததால் யானையைக் கண்டு, தரிசனத்தில் இருந்த பக்தர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆலயத்திற்குள் இருந்த மக்கள் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக அலறியடித்து ஓடினர்.
ஆலயத்திற்குள் நுழைந்த யானை பக்தர்களை பதற்றத்தில் ஓட விட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவிலுக்குள் புகுந்த காட்டு யானை் பக்தர்களை திசை தெரியாது ஓட விட்ட காட்சி வைரல் கோவில் ஒன்றில் ஆயுத பூஜை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காட்டுயானை ஒன்று திடீரென நுழைந்துள்ளது. கோயம்புத்தூர் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் ஆயுத பூஜைக்காக பக்தர்கள் திரண்டிருந்தனர். பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒற்றைக் காட்டு யானை கோவிலுக்குள் புகுந்தது. குறித்த யானை உணவு தேடி கோவிலுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூஜையின் போது திடீரென யானை நுழைந்ததால் யானையைக் கண்டு, தரிசனத்தில் இருந்த பக்தர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஆலயத்திற்குள் இருந்த மக்கள் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக அலறியடித்து ஓடினர். ஆலயத்திற்குள் நுழைந்த யானை பக்தர்களை பதற்றத்தில் ஓட விட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.