• Apr 19 2026

இந்தியத் துணை ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம் - கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

Chithra / Apr 19th 2026, 8:11 am
image

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


இந்தியத் துணை ஜனாதிபதி இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். 


அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய வாகனப் பேரணியில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.


இதன்காரணமாக, அவர் பயணிக்கும் காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியத் துணை ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம் - கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்தியத் துணை ஜனாதிபதி இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய வாகனப் பேரணியில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.இதன்காரணமாக, அவர் பயணிக்கும் காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement