தற்காலிகமாக அமுலில் இருந்த 10% உலகளாவிய இறக்குமதி வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்களுக்கு புதிய சுங்கவரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய தீர்மானத்தின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது.
கட்டாய உழைப்புத் தடைகளை அமுல்படுத்துவதில் தளர்வு காணப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10% வரி இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், கனடா, மெக்சிகோ, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரித்தானியா, கம்போடியா, ஆர்ஜென்டினா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், ஜோர்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சீனா உள்ளிட்ட மேலும் 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களையும் இந்த புதிய வரி நடைமுறை உள்ளடக்குகிறது.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரை "பரஸ்பர வரிகள்" (Reciprocal Tariffs) விதிக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை அமெரிக்க உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 150 நாட்களுக்கு 10% தற்காலிக வரியை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தியது.
அந்த தற்காலிக வரியின் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வரி முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் முக்கிய நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா தற்காலிகமாக அமுலில் இருந்த 10% உலகளாவிய இறக்குமதி வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்களுக்கு புதிய சுங்கவரிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய தீர்மானத்தின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. கட்டாய உழைப்புத் தடைகளை அமுல்படுத்துவதில் தளர்வு காணப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 10% வரி இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், கனடா, மெக்சிகோ, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரித்தானியா, கம்போடியா, ஆர்ஜென்டினா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், ஜோர்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனுடன், சீனா உள்ளிட்ட மேலும் 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களையும் இந்த புதிய வரி நடைமுறை உள்ளடக்குகிறது.அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரை "பரஸ்பர வரிகள்" (Reciprocal Tariffs) விதிக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை அமெரிக்க உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 150 நாட்களுக்கு 10% தற்காலிக வரியை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தியது.அந்த தற்காலிக வரியின் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வரி முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் முக்கிய நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.