2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக இன்று முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கிச் சட்டக்கோவையின் 22ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாகக் கருதப்படுவர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2027–2028ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களின் பதிவுப் புதுப்பித்தல் பணிகளும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன், உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம் 2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இதற்காக இன்று முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கிச் சட்டக்கோவையின் 22ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாகக் கருதப்படுவர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, 2027–2028ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களின் பதிவுப் புதுப்பித்தல் பணிகளும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன், உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.