மன்னாரில் சிறு குழந்தைக்காக வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி காணப்பட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், முறைப்பாடு செய்தும் சுகாதாரத்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னார் – பள்ளிமுனைப் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (27) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்காக குறித்த உணவகத்தில் முட்டை ரொட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.
குழந்தை அதனை உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில், உணவுக்குள் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நகரசபை அல்லது பொது சுகாதார பரிசோதகர் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறு குழந்தைக்காக வாங்கப்பட்ட உணவில் இரும்புத் துண்டு காணப்பட்டதாக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உணவகங்களில் பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
குழந்தைக்காக வாங்கிய முட்டை ரொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி - மன்னார் பிரபல உணவகத்தில் பரபரப்பு மன்னாரில் சிறு குழந்தைக்காக வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி காணப்பட்டதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், முறைப்பாடு செய்தும் சுகாதாரத்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.மன்னார் – பள்ளிமுனைப் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (27) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்காக குறித்த உணவகத்தில் முட்டை ரொட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.குழந்தை அதனை உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில், உணவுக்குள் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நகரசபை அல்லது பொது சுகாதார பரிசோதகர் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.சிறு குழந்தைக்காக வாங்கப்பட்ட உணவில் இரும்புத் துண்டு காணப்பட்டதாக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உணவகங்களில் பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.