பீகார் மாநிலத்தில், 45 வயதான நபரின் கண் கீழ் பகுதியில் முளைத்த பல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பல மாதங்களாக முக வீக்கம் மற்றும் பார்வை குறைபாட்டால் அவதியுற்று, பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கபட்டார்.
அங்கு சோதனையின் போது, அவரது கண் ஆழத்தில் எலும்புக்குள் பல் ஒன்று வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் வேர், கண்ணின் குழிக்கே நெருங்கியிருந்ததால், சிக்கலான அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உருவானது.
மருத்துவர் நிம்மி சிங் தலைமையிலான சிறப்பு குழு, மேம்பட்ட CBCT ஸ்கேன் மூலம் பல்லின் துல்லியமான நிலையை கணித்து, பின்னர், கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பல் அகற்றப்பட்டது.
சிகிச்சைக்கு பின் நோயாளியின் முக வீக்கம் குணமடைந்தது.
இதுபோன்ற அபூர்வமான மருத்துவ சம்பவம் உலகளவில் சாதாரணமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கண்வலியால் துடித்தவருக்கு காத்திருந்த அதிரிச்சி; கண்ணில் முளைத்த பல் பீகார் மாநிலத்தில், 45 வயதான நபரின் கண் கீழ் பகுதியில் முளைத்த பல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பல மாதங்களாக முக வீக்கம் மற்றும் பார்வை குறைபாட்டால் அவதியுற்று, பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கபட்டார்.அங்கு சோதனையின் போது, அவரது கண் ஆழத்தில் எலும்புக்குள் பல் ஒன்று வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வேர், கண்ணின் குழிக்கே நெருங்கியிருந்ததால், சிக்கலான அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உருவானது.மருத்துவர் நிம்மி சிங் தலைமையிலான சிறப்பு குழு, மேம்பட்ட CBCT ஸ்கேன் மூலம் பல்லின் துல்லியமான நிலையை கணித்து, பின்னர், கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பல் அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின் நோயாளியின் முக வீக்கம் குணமடைந்தது. இதுபோன்ற அபூர்வமான மருத்துவ சம்பவம் உலகளவில் சாதாரணமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.