• Nov 12 2025

காட்டு யானைகளால் உயிர் அச்சத்தில் வாழும் ஈச்சநகர் மக்கள்

Chithra / Oct 12th 2025, 2:26 pm
image

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பகுதியில் தொடரும் காட்டு யானைகளின் தொல்லையால்  பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று நள்ளிரவு 2.00 மணியளவில் ஈச்சநகர் குளத்தை அண்டிய பகுதியில் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும்  அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள ஈச்ச நகர் குளத்தின் வழியாக காட்டு யானைகள் அதிகம் ஊருக்குள் படையெடுக்கின்றது.

பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இரவில் நிம்மதியாக கூட தங்கள் பிள்ளைகளுடன் தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

தங்களின் காணிக்குள் உள்ள தென்னை, பலா, வாழை போன்ற சுமார் 15 க்கும் மேற்பட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


காட்டு யானைகளால் உயிர் அச்சத்தில் வாழும் ஈச்சநகர் மக்கள் திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பகுதியில் தொடரும் காட்டு யானைகளின் தொல்லையால்  பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று நள்ளிரவு 2.00 மணியளவில் ஈச்சநகர் குளத்தை அண்டிய பகுதியில் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும்  அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் உள்ள ஈச்ச நகர் குளத்தின் வழியாக காட்டு யானைகள் அதிகம் ஊருக்குள் படையெடுக்கின்றது.பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இரவில் நிம்மதியாக கூட தங்கள் பிள்ளைகளுடன் தூங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களின் காணிக்குள் உள்ள தென்னை, பலா, வாழை போன்ற சுமார் 15 க்கும் மேற்பட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement