• May 12 2026

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சந்தை திருத்தப்படவில்லை! வர்த்தகர்கள் கவலை

Chithra / May 12th 2026, 8:50 pm
image


கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தனில் கடந்த 30ஆம் திகதி வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானது.


இதுதொடர்பில் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில் 


இன்று வரை சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத  காரணத்தினால் வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.


வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் காய்கறிகள் நனைத்து மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.


மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக தாம் மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர் 


எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்


குறித்த சந்தை தொகுதி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது


சூறாவளியால் பாதிக்கப்பட்ட சந்தை திருத்தப்படவில்லை வர்த்தகர்கள் கவலை கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தனில் கடந்த 30ஆம் திகதி வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானது.இதுதொடர்பில் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில் இன்று வரை சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத  காரணத்தினால் வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் காய்கறிகள் நனைத்து மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக தாம் மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர் எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்குறித்த சந்தை தொகுதி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement