• Sep 07 2026

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தில்

Chithra / Sep 6th 2026, 5:05 pm
image


மாநகரசபைகள் மற்றும் நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள், பிரதேச சபைகள் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரதான உள்ளூராட்சி சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.


மேலும், உள்ளூராட்சி துறையுடன் தொடர்புடைய மேலும் 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காலத்திற்கு ஒவ்வாத விடயங்களைக் கொண்டுள்ள உள்ளூராட்சி சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரச நிர்வாக மட்டமாகச் செயற்பட்டு வருவதுடன், பல்வேறு பொதுச் சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.


எனினும், இப்பணிகளை நடைமுறைப்படுத்தும்போது சபை நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் தொழில்சார் ஆற்றல்களை மேம்படுத்துவதே குறித்த பயிலரங்கின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபை அமர்வுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகள், சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், குழுக்களின் செயற்பாடுகள், கொள்முதல் நடைமுறைகளின் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பயிலரங்கில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.


அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட செயற்பாடுகளின்போது எதிர்கொள்ளப்படும் நிர்வாக, சட்ட மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல் மற்றும் அனுபவப் பகிர்வுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொதுச் சேவை வழங்கலின் செயல்திறனை மேலும் உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தில் மாநகரசபைகள் மற்றும் நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள், பிரதேச சபைகள் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரதான உள்ளூராட்சி சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.மேலும், உள்ளூராட்சி துறையுடன் தொடர்புடைய மேலும் 7 சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலத்திற்கு ஒவ்வாத விடயங்களைக் கொண்டுள்ள உள்ளூராட்சி சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரச நிர்வாக மட்டமாகச் செயற்பட்டு வருவதுடன், பல்வேறு பொதுச் சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.எனினும், இப்பணிகளை நடைமுறைப்படுத்தும்போது சபை நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் தொழில்சார் ஆற்றல்களை மேம்படுத்துவதே குறித்த பயிலரங்கின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சபை அமர்வுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகள், சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், குழுக்களின் செயற்பாடுகள், கொள்முதல் நடைமுறைகளின் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பயிலரங்கில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட செயற்பாடுகளின்போது எதிர்கொள்ளப்படும் நிர்வாக, சட்ட மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் திறந்த கலந்துரையாடல் மற்றும் அனுபவப் பகிர்வுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொதுச் சேவை வழங்கலின் செயல்திறனை மேலும் உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement