• Jul 24 2026

கோட்டாவின் எழுத்தாணை மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3 இற்கு ஒத்திவைப்பு

Chithra / Jul 23rd 2026, 7:26 pm
image


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இம் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகியிருந்தார்.


இந்தச் சந்திப்பில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவின் எழுத்தாணை மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3 இற்கு ஒத்திவைப்பு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இம் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகியிருந்தார்.இந்தச் சந்திப்பில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement