• May 06 2025

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / May 5th 2025, 3:56 pm
image

 

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலங்கொடை, நீதிவான் நீதிமன்றில் இன்று (05) அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

அண்மையில் சக மாணவர் ஒருவரின் மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) நேற்று (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது ஒரு பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஒரு பகிடிவதை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இறந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான் என்ற இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார்.

மே 1 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில், குறித்த மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி முறைப்பாடு அளித்தார்.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 2), சமனலவேவா பொலிஸார் 20 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், சரித் தில்ஷான் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, மே 3 ஆம் திபதி, பதில் பொலிஸ்மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பலங்கொடை, நீதிவான் நீதிமன்றில் இன்று (05) அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.அண்மையில் சக மாணவர் ஒருவரின் மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) நேற்று (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இது ஒரு பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஒரு பகிடிவதை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.இறந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான் என்ற இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார்.மே 1 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில், குறித்த மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி முறைப்பாடு அளித்தார்.இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 2), சமனலவேவா பொலிஸார் 20 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.இதற்கிடையில், சரித் தில்ஷான் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, மே 3 ஆம் திபதி, பதில் பொலிஸ்மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement