நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரம்பொட அக்கரபனஹ பகுதியில் இன்று (21) பெய்து வரும் கடும் மழையால் அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, ரம்பொட அக்கரபனஹ பகுதிக்குச் செல்லும் பிரதான பாலத்தின் மேலாக வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றது. இதனால் குறித்த பாலத்தைப் பயன்படுத்தி மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளதால், ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், கெசல்கமுவ ஓயா அதன் கொள்ளளவைத் தாண்டி பெருக்கெடுத்தமையால் பொகவந்தலாவ பகுதியிலுள்ள சில தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் சில கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால், நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹட்டன்–பொகவந்தலாவ–மஸ்கெலியா–பலாங்கொடை பிரதான வீதியின் டிக்கோயா மற்றும் வனராஜா தோட்டப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோர்வுட், பொகவந்தலாவ, ஹட்டன் உள்ளிட்ட மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், மண்சரிவு அபாயம் உள்ள மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரக்கூடும் எனவும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் மழையால் தத்தளிக்கும் மலைநாடு – பாலத்தின் மேலால் பாயும் வெள்ளநீர் - மண்சரிவால் மக்கள் அவதி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரம்பொட அக்கரபனஹ பகுதியில் இன்று (21) பெய்து வரும் கடும் மழையால் அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, ரம்பொட அக்கரபனஹ பகுதிக்குச் செல்லும் பிரதான பாலத்தின் மேலாக வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றது. இதனால் குறித்த பாலத்தைப் பயன்படுத்தி மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளதால், ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், கெசல்கமுவ ஓயா அதன் கொள்ளளவைத் தாண்டி பெருக்கெடுத்தமையால் பொகவந்தலாவ பகுதியிலுள்ள சில தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் சில கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருவதால், நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, ஹட்டன்–பொகவந்தலாவ–மஸ்கெலியா–பலாங்கொடை பிரதான வீதியின் டிக்கோயா மற்றும் வனராஜா தோட்டப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோர்வுட், பொகவந்தலாவ, ஹட்டன் உள்ளிட்ட மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், மண்சரிவு அபாயம் உள்ள மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரக்கூடும் எனவும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.