• Aug 21 2025

தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நல்லூரான்; காணக் குவிந்த அடியவர்கள்

Chithra / Aug 21st 2025, 7:51 am
image

 

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.


இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. 

இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர் . 

நாளைய தினம்  காலை  தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. 

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன்நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நல்லூரான்; காணக் குவிந்த அடியவர்கள்  வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர் . நாளைய தினம்  காலை  தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன்நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

Advertisement

Advertisement

Advertisement