• May 13 2026

துருக்கியைச் சூறையாடிய பெருவெள்ளம்!

Ziya / May 13th 2026, 9:53 am
image

துருக்கியின் கருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள சம்சுன் (Samsun) நகரை நிலைகுலையச் செய்துள்ளது திடீர் பெருவெள்ளம்.


குறிப்பாக ஹவ்ஸா (Havza) மாவட்டத்தில் பெய்த அதிவேக கனமழை, சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒரு ஏரியைப் போல மாற்றியுள்ளது.


திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியே உருக்குலைந்து போயுள்ளது


வெள்ளத்தில் சிக்கி மற்றும் வீடுகள் இடிந்ததில் குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 மலைப்பகுதிகளில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளம், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


பெருவெள்ளத்தின் வேகம் சாலைகள் மற்றும் பாலங்களைச் சிதைத்துள்ளது:


நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் வெள்ளத்தில் வைக்கோல் போல அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


 பாதுகாப்பு கருதி ஹவ்ஸா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


துருக்கியைச் சூறையாடிய பெருவெள்ளம் துருக்கியின் கருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள சம்சுன் (Samsun) நகரை நிலைகுலையச் செய்துள்ளது திடீர் பெருவெள்ளம்.குறிப்பாக ஹவ்ஸா (Havza) மாவட்டத்தில் பெய்த அதிவேக கனமழை, சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒரு ஏரியைப் போல மாற்றியுள்ளது.திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியே உருக்குலைந்து போயுள்ளதுவெள்ளத்தில் சிக்கி மற்றும் வீடுகள் இடிந்ததில் குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதிகளில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளம், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.பெருவெள்ளத்தின் வேகம் சாலைகள் மற்றும் பாலங்களைச் சிதைத்துள்ளது:நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் வெள்ளத்தில் வைக்கோல் போல அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாதுகாப்பு கருதி ஹவ்ஸா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement