• May 04 2026

நெருங்கும் இறுதி நேரம் கட்சிகளுக்கு திக் திக்- முந்திய விஜய் - பிந்திய ஸ்டாலின்!

Ziya / May 4th 2026, 2:41 pm
image

நெருங்கும் இறுதி நேரம் கட்சிகளுக்கு திக் திக்- முந்திய விஜய் - பிந்திய ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேல்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம்  13.13 சதவீதம் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. 


தேர்தல் ஆணையகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம்  110 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி  58 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 49  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.


இதன்படி இன்று மதிய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகக் கழகத் தலைவர் விஜய்  110  தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளார். தொடர்ந்து, திமுக 11.88 சதவீத வாக்குகளும், அதிமுக 10.47 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி 1.53 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.


ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து பரபரப்பாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி, வெற்றிப்பாதையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நகர்ந்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் வாக்கு வீதத்தில் தொடர்ந்தும் பின்னடைவில் உள்ளார். 


இந்த நிலையில் தற்போது வரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்துள்ளதால் தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக ஆட்சி யார் கையில்? என்றவாறாக ஒவ்வொருவரும் திக்திக் நொடியில் முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர்.

நெருங்கும் இறுதி நேரம் கட்சிகளுக்கு திக் திக்- முந்திய விஜய் - பிந்திய ஸ்டாலின் நெருங்கும் இறுதி நேரம் கட்சிகளுக்கு திக் திக்- முந்திய விஜய் - பிந்திய ஸ்டாலின்தமிழக சட்டமன்றத் தேல்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம்  13.13 சதவீதம் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம்  110 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி  58 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 49  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.இதன்படி இன்று மதிய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகக் கழகத் தலைவர் விஜய்  110  தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளார். தொடர்ந்து, திமுக 11.88 சதவீத வாக்குகளும், அதிமுக 10.47 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி 1.53 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து பரபரப்பாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி, வெற்றிப்பாதையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நகர்ந்துள்ளார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் வாக்கு வீதத்தில் தொடர்ந்தும் பின்னடைவில் உள்ளார். இந்த நிலையில் தற்போது வரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்துள்ளதால் தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக ஆட்சி யார் கையில் என்றவாறாக ஒவ்வொருவரும் திக்திக் நொடியில் முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement