அம்பாறையில் அக்கரைப்பற்று - பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது.
காணாமல்போனவர் ஒலுவில் 01 பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
கல்ஓயா ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை எடுக்க, மற்றொரு நபருடன் நீந்திச் சென்றபோது, முதலை அவரை இழுத்துச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போனவரை தேடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள், கடற்படை டைவிங் குழு, சம்மாந்துறை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிவரை தேடுதல் மேற்கொண்ட நிலையில் நிறைவடைந்த தேடுதல் நடவடிக்கையானது இன்று(5) காலை மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என களப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறையில் படகு எடுக்கச் சென்றவரை இழுத்திச் சென்ற முதலை தேடும் பணி தீவிரம் அம்பாறையில் அக்கரைப்பற்று - பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது.காணாமல்போனவர் ஒலுவில் 01 பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.கல்ஓயா ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை எடுக்க, மற்றொரு நபருடன் நீந்திச் சென்றபோது, முதலை அவரை இழுத்துச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காணாமல் போனவரை தேடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள், கடற்படை டைவிங் குழு, சம்மாந்துறை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு 10 மணிவரை தேடுதல் மேற்கொண்ட நிலையில் நிறைவடைந்த தேடுதல் நடவடிக்கையானது இன்று(5) காலை மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என களப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.மக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.