• May 21 2025

எங்களை புறந்தள்ளினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது- சபையில் சத்தியலிங்கம் வெளிப்படை..!

Sharmi / May 21st 2025, 5:07 pm
image

வட-கிழக்கிலுள்ளவர்களை இனவாதிகள் என்று தற்போதைய அரசாங்கமும் புறந்தள்ளுமானால்  இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் சபையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார சவாலாக இருக்கலாம் அல்லது தங்களுடைய விவசாயத்தைப் பாதுகாப்பதாக இருக்கலாம். காட்டு விலங்குகளால் ஏற்படுகின்ற சவாலாக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி தாங்கள் உற்பத்தி செய்கின்ற உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு சந்தையிலே விற்பனை செய்வதற்கு  எங்களுடைய பிரதேசங்களிலே மிகவும் குறைவான வசதிகள் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நான் மாகாணசபையிலே இருந்தபோது அப்போதிருந்த அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதாவது வவுனியா மாவட்டத்திலே விவசாயிகள் குறிப்பாக மரக்கறி செய்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பதற்காக ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தக்  கோரிக்கைக்கு அமைவாக 260 மில்லியன் ரூபா அந்த நேரத்தில் இருந்த அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது தொடர்பான இழுபறிகள் இருந்தபோதும் இறுதியாக பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்கப்பட்டு 263 மில்லியன் ரூபா செலவிலே 2018 ஆம் ஆண்டு பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது. 

பொருளாதார மத்திய நிலையமாக அந்த நேரத்திலே 263 மில்லியன் என்பது தற்போது 700 , 800 மில்லியன் பெறுமதி . கடந்த 7 வருடங்களாக 52 கடைத்தொகுதிகளைக்  கொண்ட அந்தப் பொருளாதார மத்திய நிலையம் எந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் விடுவிக்கப்படமால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு இன்றும் மூடப்பட்ட ஒரு மத்திய நிலையமாகக் காணப்படுகின்றது.

ஆனால் எங்களுடைய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை உற்பத்தியை ஒரு நியாயமான விலைக்கு விற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அந்த விடயத்தை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். எங்களுடைய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை தரமான வகையிலே அவர்களுக்கு வேண்டிய அந்த விலையிலே விற்கக் கூடிய அந்த ஏற்பாட்டை இந்த அரசாங்கம் செய்து தர வேண்டும். எங்களுடைய பிரதேசம் 30 ஆண்டுகளாக யுத்தம் செய்த பிரதேசம். இந்த நாட்டிலே தென்பகுதியில் வாழுகி்ன்ற மக்கள் எதிர்கொள்கின்ற அதே பிரச்சினைகள் நாங்களும் எதிர்கொள்கின்றோம்.

அது பொருளாதார பிரச்சினை குறிப்பாக வடகிழக்கிலே வாழுகின்ற மக்கள் தென்பகுதியில் வாழுகின்ற மக்கள் ஒருநாடு என்ற வகையிலே நாங்கள் எல்லோரும் இலங்கையர்களாக பொருளாதாரப் பிரச்சினைகளை இன்றும் எதிர்கொள்கின்றோம்.

வடகிழக்கில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களிலும் பார்க்க பொருளாதார பிரச்சினைகளுக்கு மேலதிகமாக யுத்தத்தினால் அவர்களுடைய அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து இரட்டிப்பான பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ்பேசும் மக்கள் கடந்த 70 வருடங்களாக எங்களுடைய நாட்டிலே சமப்படுத்தப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று ஆரம்பத்திலே அகிம்சை வழியாகவும் கொடுமையாக அடக்கப்பட்ட போது ஆயுத ரீதியாகவும் அரசுக்கெதிராக போராடினார்கள்.

 எங்களுடைய உரிமைக்காகப் போராடினார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் தென்பகுதி இளைஞர்கள் தங்களுடைய கொள்கைகளுடன் ஒத்துப்போகக் கூடிய வடபகுதி இளைஞர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார்கள். 

தெற்கிலே போராடிய மக்கள் வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஏற்று நிற்கிறார்கள். ஆயுதப் போராட்டம் நடத்திய தென்பகுதி மக்கள் இன்றைய அரசாங்கத்தில் இருக்கின்றார்கள்.

ஆகவே எங்களுடைய பிரச்சினைகளை கடந்தகால அரசியல் விளங்கியதை விட உணர்வுபூர்வமாக  ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே புரிய வேண்டியவர்கள் நீங்கள்.

தமிழ்மக்களுடைய பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த 16 ஆண்டுகளில் வடக்கு கிழக்கிலே வாழுகின்ற மக்களுடைய பொருளாதாரத்துக்காக கடந்த அரசாங்கங்கள் என்ன செய்திருக்கிறார்கள். என்ன திட்டத்தை வகுத்திருகு்கிறார்கள். சமுதாயத்தில் 1ஃ3 பகுதி மக்கள் ஏனையவர்களின் தயவிலே வாழுகிறார்கள் .  கடந்த கால அரசாங்கத்தை விட இப்போதைய அரசாங்கம் தங்களுக்கு ஓர் மாற்றத்தை வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் சொற்தக் காலில் உழைத்து வாழ அடிப்படையான ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கையில். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெயர்ந்து தங்கள் இடங்களுக்கு வரும் மக்களின் காணிகளை வனஇலாகா அபகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்றும் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் பிரதிநிதியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய  பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்கு எதுவுமில்லாமல் அவர்களுக்கு வழங்காது இருப்பது மனவருத்தமளிக்கின்றது.

மக்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு செய்யப்படக்கூடிய திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். திட்டங்கபளைக் கொண்டு வரவேண்டும். பணத்தை முதலீடு செய்பவர்களைக் கொண்டு வர வேண்டும். 

முதலீடு செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இங்கு நான் முன்வைக்கின்றேன்.  துறைமுகங்கள் சில இயங்காது இருக்கும் பொழுதும் காங்கேசன்துறைக்கு என்று ஒதுக்கப்பட்ட 62 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது.

இவ்வாறு பல பிரச்சினைகளை வடகிழக்கிலுள்ளோர் நாம் எதிர்கொள்கின்றோம். ஆகவே  நாங்கள் இலங்கையர்களாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என நினைக்காது  நீங்களும் புறந்தள்ளுவீர்கள், இனவாதம் என்று நினைத்தால் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. - என்றார். 


எங்களை புறந்தள்ளினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது- சபையில் சத்தியலிங்கம் வெளிப்படை. வட-கிழக்கிலுள்ளவர்களை இனவாதிகள் என்று தற்போதைய அரசாங்கமும் புறந்தள்ளுமானால்  இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் சபையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதார சவாலாக இருக்கலாம் அல்லது தங்களுடைய விவசாயத்தைப் பாதுகாப்பதாக இருக்கலாம். காட்டு விலங்குகளால் ஏற்படுகின்ற சவாலாக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி தாங்கள் உற்பத்தி செய்கின்ற உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு சந்தையிலே விற்பனை செய்வதற்கு  எங்களுடைய பிரதேசங்களிலே மிகவும் குறைவான வசதிகள் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நான் மாகாணசபையிலே இருந்தபோது அப்போதிருந்த அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதாவது வவுனியா மாவட்டத்திலே விவசாயிகள் குறிப்பாக மரக்கறி செய்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பதற்காக ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அந்தக்  கோரிக்கைக்கு அமைவாக 260 மில்லியன் ரூபா அந்த நேரத்தில் இருந்த அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது தொடர்பான இழுபறிகள் இருந்தபோதும் இறுதியாக பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்கப்பட்டு 263 மில்லியன் ரூபா செலவிலே 2018 ஆம் ஆண்டு பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது.  பொருளாதார மத்திய நிலையமாக அந்த நேரத்திலே 263 மில்லியன் என்பது தற்போது 700 , 800 மில்லியன் பெறுமதி . கடந்த 7 வருடங்களாக 52 கடைத்தொகுதிகளைக்  கொண்ட அந்தப் பொருளாதார மத்திய நிலையம் எந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் விடுவிக்கப்படமால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு இன்றும் மூடப்பட்ட ஒரு மத்திய நிலையமாகக் காணப்படுகின்றது.ஆனால் எங்களுடைய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை உற்பத்தியை ஒரு நியாயமான விலைக்கு விற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அந்த விடயத்தை இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். எங்களுடைய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை தரமான வகையிலே அவர்களுக்கு வேண்டிய அந்த விலையிலே விற்கக் கூடிய அந்த ஏற்பாட்டை இந்த அரசாங்கம் செய்து தர வேண்டும். எங்களுடைய பிரதேசம் 30 ஆண்டுகளாக யுத்தம் செய்த பிரதேசம். இந்த நாட்டிலே தென்பகுதியில் வாழுகி்ன்ற மக்கள் எதிர்கொள்கின்ற அதே பிரச்சினைகள் நாங்களும் எதிர்கொள்கின்றோம். அது பொருளாதார பிரச்சினை குறிப்பாக வடகிழக்கிலே வாழுகின்ற மக்கள் தென்பகுதியில் வாழுகின்ற மக்கள் ஒருநாடு என்ற வகையிலே நாங்கள் எல்லோரும் இலங்கையர்களாக பொருளாதாரப் பிரச்சினைகளை இன்றும் எதிர்கொள்கின்றோம். வடகிழக்கில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களிலும் பார்க்க பொருளாதார பிரச்சினைகளுக்கு மேலதிகமாக யுத்தத்தினால் அவர்களுடைய அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து இரட்டிப்பான பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தமிழ்பேசும் மக்கள் கடந்த 70 வருடங்களாக எங்களுடைய நாட்டிலே சமப்படுத்தப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று ஆரம்பத்திலே அகிம்சை வழியாகவும் கொடுமையாக அடக்கப்பட்ட போது ஆயுத ரீதியாகவும் அரசுக்கெதிராக போராடினார்கள். எங்களுடைய உரிமைக்காகப் போராடினார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் தென்பகுதி இளைஞர்கள் தங்களுடைய கொள்கைகளுடன் ஒத்துப்போகக் கூடிய வடபகுதி இளைஞர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார்கள்.  தெற்கிலே போராடிய மக்கள் வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஏற்று நிற்கிறார்கள். ஆயுதப் போராட்டம் நடத்திய தென்பகுதி மக்கள் இன்றைய அரசாங்கத்தில் இருக்கின்றார்கள். ஆகவே எங்களுடைய பிரச்சினைகளை கடந்தகால அரசியல் விளங்கியதை விட உணர்வுபூர்வமாக  ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையிலே புரிய வேண்டியவர்கள் நீங்கள்.தமிழ்மக்களுடைய பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த 16 ஆண்டுகளில் வடக்கு கிழக்கிலே வாழுகின்ற மக்களுடைய பொருளாதாரத்துக்காக கடந்த அரசாங்கங்கள் என்ன செய்திருக்கிறார்கள். என்ன திட்டத்தை வகுத்திருகு்கிறார்கள். சமுதாயத்தில் 1ஃ3 பகுதி மக்கள் ஏனையவர்களின் தயவிலே வாழுகிறார்கள் .  கடந்த கால அரசாங்கத்தை விட இப்போதைய அரசாங்கம் தங்களுக்கு ஓர் மாற்றத்தை வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் சொற்தக் காலில் உழைத்து வாழ அடிப்படையான ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கையில். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெயர்ந்து தங்கள் இடங்களுக்கு வரும் மக்களின் காணிகளை வனஇலாகா அபகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்றும் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் பிரதிநிதியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய  பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்கு எதுவுமில்லாமல் அவர்களுக்கு வழங்காது இருப்பது மனவருத்தமளிக்கின்றது.மக்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு செய்யப்படக்கூடிய திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். திட்டங்கபளைக் கொண்டு வரவேண்டும். பணத்தை முதலீடு செய்பவர்களைக் கொண்டு வர வேண்டும்.  முதலீடு செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இங்கு நான் முன்வைக்கின்றேன்.  துறைமுகங்கள் சில இயங்காது இருக்கும் பொழுதும் காங்கேசன்துறைக்கு என்று ஒதுக்கப்பட்ட 62 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. இவ்வாறு பல பிரச்சினைகளை வடகிழக்கிலுள்ளோர் நாம் எதிர்கொள்கின்றோம். ஆகவே  நாங்கள் இலங்கையர்களாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என நினைக்காது  நீங்களும் புறந்தள்ளுவீர்கள், இனவாதம் என்று நினைத்தால் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement