• Oct 11 2024

கொலையில் முடிந்த அடிதடி; சிக்கிய 19 வயது இளைஞன்! கொழும்பில் பயங்கரம்

Chithra / Aug 26th 2024, 11:06 am
image

Advertisement


கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. 

44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையில் முடிந்த அடிதடி; சிக்கிய 19 வயது இளைஞன் கொழும்பில் பயங்கரம் கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement