• Apr 19 2026

வளர்ப்பு நாய் கொண்டு வந்த பந்தால் வந்த வினை; விளையாடும்போது வெடித்ததில் சிறுவன் காயம்!

dog
Chithra / Mar 26th 2026, 12:35 pm
image


நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கம்பஹா - பல்லேவெல – பந்துராகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதுதொடர்பில் பல்லேவெல பொலிஸார் தெரிவித்ததாவது, 


சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார்.


இதற்கிடையில், அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்துள்ளது.


இதன்போது காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பாக பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

வளர்ப்பு நாய் கொண்டு வந்த பந்தால் வந்த வினை; விளையாடும்போது வெடித்ததில் சிறுவன் காயம் நாய் கொண்டு வந்த பந்து போன்ற பொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கம்பஹா - பல்லேவெல – பந்துராகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பில் பல்லேவெல பொலிஸார் தெரிவித்ததாவது, சிறுவன் வீட்டில் இருந்தபோது, அவர்களது வளர்ப்பு நாய் பந்து போன்ற பொருளொன்றை கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை சிறுவன் நாயிடமிருந்து எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளார்.இதற்கிடையில், அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பொருள் வெடித்துள்ளது.இதன்போது காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement