தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள பெரு நாட்டில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வர்த்தக மையமான பெனிகோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் குறித்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெனிகோ என்று பெயரிடப்பட்ட இந்த நகரம் கி.மு 1800 முதல் 1500 வரை பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் பழமையானதாகக் கருதப்படும் பண்டைய கேரல் நாகரிகத்தின் இடத்திற்கு அருகில் பாரன்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது.
குறித்த நகரம் பசிபிக் கடலோர சமூகங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசான் பகுதிகளில் உள்ளவர்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் மிக பழமையான 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கேரல் சுப் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இந்த இடம் நோக்கப்படுகின்றது. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கேரல் நாகரிகத்தின் பழமையான 32 கட்டமைப்புகள் எகிப்த், இந்தியா, சுமேரியா மற்றும் சீனா நாகரிகங்களில் சமகாலத்து நாகரிகமாக கருதப்படுகிறது. மேலும் அந்த சமூகங்களைப் போலல்லாமல், கேரல் முற்றிலும் தனிமையில் வளர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெருவில் நாட்டிலேயே உலகின் மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு காணப்படுகின்றது. அத்துடன் பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரிகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது.
இவ்வாறு பிரசித்தி பெற்ற ஓர் பகுதியில் தற்போது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிசயிக்க வைத்துள்ளது. இந்த நகரத்திலுள்ள பழமையை தொல்பொருளியலாளர்கள் ட்ரோன் கமரா மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்கிருந்த கேரல் நாகரிகம் இயற்கை பேரிடர்களால் அழிந்து இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், புதிதாக கண்டறியப்பட்ட இந்த பழைமவாய்ந்த நகரத்தில் காணப்படும் மர்மங்களை வெளிப்படுத்த அங்கு தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
3,500 ஆண்டுகள் பழமையான பெருவின் பெனிகோ நகரம் தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள பெரு நாட்டில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வர்த்தக மையமான பெனிகோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் குறித்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை வெளிப்படுத்தியுள்ளனர். பெனிகோ என்று பெயரிடப்பட்ட இந்த நகரம் கி.மு 1800 முதல் 1500 வரை பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் பழமையானதாகக் கருதப்படும் பண்டைய கேரல் நாகரிகத்தின் இடத்திற்கு அருகில் பாரன்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. குறித்த நகரம் பசிபிக் கடலோர சமூகங்களை ஆண்டிஸ் மற்றும் அமேசான் பகுதிகளில் உள்ளவர்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அமெரிக்காவின் மிக பழமையான 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கேரல் சுப் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இந்த இடம் நோக்கப்படுகின்றது. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கேரல் நாகரிகத்தின் பழமையான 32 கட்டமைப்புகள் எகிப்த், இந்தியா, சுமேரியா மற்றும் சீனா நாகரிகங்களில் சமகாலத்து நாகரிகமாக கருதப்படுகிறது. மேலும் அந்த சமூகங்களைப் போலல்லாமல், கேரல் முற்றிலும் தனிமையில் வளர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருவில் நாட்டிலேயே உலகின் மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு காணப்படுகின்றது. அத்துடன் பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரிகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது. இவ்வாறு பிரசித்தி பெற்ற ஓர் பகுதியில் தற்போது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிசயிக்க வைத்துள்ளது. இந்த நகரத்திலுள்ள பழமையை தொல்பொருளியலாளர்கள் ட்ரோன் கமரா மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே அங்கிருந்த கேரல் நாகரிகம் இயற்கை பேரிடர்களால் அழிந்து இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், புதிதாக கண்டறியப்பட்ட இந்த பழைமவாய்ந்த நகரத்தில் காணப்படும் மர்மங்களை வெளிப்படுத்த அங்கு தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.