• Jun 25 2026

வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு!

Ziya / Jun 24th 2026, 5:22 pm
image

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி தட்ஷாஜினி வஜிகரன் இன்று (24) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதுவரை காலம் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த அவர், தற்போது கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.


இதனைத் தொடர்ந்தே, அவர் இன்று வவுனியா வடக்கு கல்வி வலய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.


இவருக்கு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக தட்ஷாஜினி வஜிகரன் பதவியேற்பு வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி தட்ஷாஜினி வஜிகரன் இன்று (24) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதுவரை காலம் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த அவர், தற்போது கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதனைத் தொடர்ந்தே, அவர் இன்று வவுனியா வடக்கு கல்வி வலய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.இவருக்கு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement