• Sep 10 2026

பயங்கர பனிச்சரிவு; 11 மலையேற்ற வீரர்கள் பலி! 6 பேர் மாயம்

Chithra / Sep 9th 2026, 10:03 am
image


ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த அனர்த்தத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்றக் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.


பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தும் நோக்கில் 50-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


எனினும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷ்ய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பயங்கர பனிச்சரிவு; 11 மலையேற்ற வீரர்கள் பலி 6 பேர் மாயம் ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த அனர்த்தத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்றக் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தும் நோக்கில் 50-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எனினும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷ்ய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement