• Apr 14 2026

வவுனியாவில் ஆசிரியர் மாயம்! 3 மாதங்களாகத் தொடரும் தேடல்

Chithra / Feb 14th 2026, 7:31 am
image


வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


காணாமல் போனவர் 36 வயதுடைய அன்ரனி ஜோய்  என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


இவர் கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


அவர் காணாமல் போனது முதல் இன்று வரை அவரது தொலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.  


இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது இவரை எங்கேனும் கண்டால், 

உடனடியாகக் 0777444117, 0772011106 குறித்த எண்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஆசிரியர் மாயம் 3 மாதங்களாகத் தொடரும் தேடல் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.காணாமல் போனவர் 36 வயதுடைய அன்ரனி ஜோய்  என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.அவர் காணாமல் போனது முதல் இன்று வரை அவரது தொலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.  இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது இவரை எங்கேனும் கண்டால், உடனடியாகக் 0777444117, 0772011106 குறித்த எண்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement