• May 15 2025

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வு முன்னெடுப்பு

Thansita / May 14th 2025, 10:16 pm
image

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியல் நிகழ்வு இடம்பெற்றது

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.

மேலும் தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து ஊர்திபவனி இன்று ஆரம்பமாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திபவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வு முன்னெடுப்பு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியல் நிகழ்வு இடம்பெற்றதுகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்டவையே முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.மேலும் தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து ஊர்திபவனி இன்று ஆரம்பமாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திபவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement