தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேடையில் RAM WALK வந்த போது தொண்டர்கள் பலர் மேடையில் துள்ளிப் பாய்ந்து சென்றுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட 10 இலட்சம் தொண்டர்கள் மதுரைக்குப் படையெடுத்துள்ளனர்.
வெயில் கூட பார்க்காமல் குழந்தைகளுடன் விஜய்யின் தொண்டர்கள் குவிந்து சென்றுள்ளனர். விஜயின் தொண்டர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்பதால் மாநாடு இடம்பெறும் பகுதிகளை சுற்றியுள்ள கம்பிகளில் கிறீஸ் தடவப்பட்டது.
கிறீஸ் தடவிய கம்பிகளையும் தாண்டி விஜய் மேடையில் RAM WALK வந்த வேளையில் தொண்டர்கள் சிலர் மேடையை நோக்கிப் பாய்ந்துள்ளனர்.
திடீரென தொண்டர்கள் பாய்ந்து நுழைந்ததால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்றப் பெரும் பாடுபட்டனர்.
விஜயின் 2 ஆவது மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு; மேடையில் RAM WALK வந்த விஜய் - துள்ளிப் பாய்ந்த தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேடையில் RAM WALK வந்த போது தொண்டர்கள் பலர் மேடையில் துள்ளிப் பாய்ந்து சென்றுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட 10 இலட்சம் தொண்டர்கள் மதுரைக்குப் படையெடுத்துள்ளனர். வெயில் கூட பார்க்காமல் குழந்தைகளுடன் விஜய்யின் தொண்டர்கள் குவிந்து சென்றுள்ளனர். விஜயின் தொண்டர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்பதால் மாநாடு இடம்பெறும் பகுதிகளை சுற்றியுள்ள கம்பிகளில் கிறீஸ் தடவப்பட்டது. கிறீஸ் தடவிய கம்பிகளையும் தாண்டி விஜய் மேடையில் RAM WALK வந்த வேளையில் தொண்டர்கள் சிலர் மேடையை நோக்கிப் பாய்ந்துள்ளனர். திடீரென தொண்டர்கள் பாய்ந்து நுழைந்ததால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்றப் பெரும் பாடுபட்டனர். விஜயின் 2 ஆவது மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.