• Oct 01 2026

மண்டைதீவில் திடீர் தீப்பரவல் – பனை மரங்கள் தீக்கிரை; போக்குவரத்தும் பாதிப்பு!

Chithra / Sep 30th 2026, 1:43 pm
image


மண்டைதீவில் ஏற்பட்ட தீவைப்பு சம்பவம் காரணமாக பெரும் நெருப்பு மற்றும் அதிகளவான புகை வெளியேறியதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த தீப்பரவலில் பயன்தரக்கூடிய பனை மரங்களும் தீக்கிரையாகியுள்ளன.


தீ கட்டுப்பாடின்றி பரவிய நிலையில், மண்டைதீவு கிராம சேவையாளர் கோகுலன் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வேலணை பிரதேச சபையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீவைப்பு சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மண்டைதீவில் திடீர் தீப்பரவல் – பனை மரங்கள் தீக்கிரை; போக்குவரத்தும் பாதிப்பு மண்டைதீவில் ஏற்பட்ட தீவைப்பு சம்பவம் காரணமாக பெரும் நெருப்பு மற்றும் அதிகளவான புகை வெளியேறியதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலில் பயன்தரக்கூடிய பனை மரங்களும் தீக்கிரையாகியுள்ளன.தீ கட்டுப்பாடின்றி பரவிய நிலையில், மண்டைதீவு கிராம சேவையாளர் கோகுலன் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வேலணை பிரதேச சபையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீவைப்பு சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement