பதுளை - லுணுகலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுவிண்டன் தோட்டப் பகுதியில் இன்று (01) காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக தொழிலாளர்கள் வசித்து வந்த மூன்று லயன் குடியிருப்புகள் முற்றிலும் தீக்கிரையாகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (01) காலை சுவிண்டன் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பொன்றில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சமயம் வீசிய காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி, அருகிலிருந்த மேலும் இரண்டு குடியிருப்புகளும் தீயின் பிடியில் சிக்கியுள்ளன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக திரண்ட தோட்ட மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிகளுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், மூன்று வீடுகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பல குடும்பங்கள் தற்காலிகமாக தங்குமிட இழப்பை எதிர்கொண்டுள்ளன.
விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளையும் அவசர நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பாக லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லுணுகலை சுவிண்டன் தோட்டத்தில் திடீர் தீ விபத்து - மூன்று குடியிருப்புகள் தீக்கிரை பதுளை - லுணுகலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுவிண்டன் தோட்டப் பகுதியில் இன்று (01) காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக தொழிலாளர்கள் வசித்து வந்த மூன்று லயன் குடியிருப்புகள் முற்றிலும் தீக்கிரையாகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.இன்று (01) காலை சுவிண்டன் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பொன்றில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்சமயம் வீசிய காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி, அருகிலிருந்த மேலும் இரண்டு குடியிருப்புகளும் தீயின் பிடியில் சிக்கியுள்ளன.சம்பவ இடத்திற்கு உடனடியாக திரண்ட தோட்ட மக்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிகளுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், மூன்று வீடுகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பல குடும்பங்கள் தற்காலிகமாக தங்குமிட இழப்பை எதிர்கொண்டுள்ளன.விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளையும் அவசர நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சம்பவம் தொடர்பாக லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.