நுவரெலியா மாவட்டத்திலுள்ள எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (18) காலை 8.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகள், காலை பாடசாலை முற்றத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டிருந்தபோது, பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையில் இருந்த குளவிக்கூடு கலைந்துள்ளது.
இதனையடுத்து, கலைந்து சென்ற குளவிகள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணவிகளைக் கொட்டியுள்ளன.
சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகளையும் 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மாணவிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றுகூடலில் திடீர் பரபரப்பு - மாணவிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நுவரெலியா மாவட்டத்திலுள்ள எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று (18) காலை 8.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த பாடசாலையில் தரம் 8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகள், காலை பாடசாலை முற்றத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டிருந்தபோது, பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையில் இருந்த குளவிக்கூடு கலைந்துள்ளது.இதனையடுத்து, கலைந்து சென்ற குளவிகள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணவிகளைக் கொட்டியுள்ளன.சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகளையும் 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த மாணவிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.