திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர விசேட அதிரடிப்படையினர் நேற்று (04) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குறித்த மதுபானங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம் மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியாவில் STF அதிரடி நடவடிக்கை - மதுபானங்களுடன் சிக்கிய பெண் திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர விசேட அதிரடிப்படையினர் நேற்று (04) இரவு கைப்பற்றியுள்ளனர்.இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குறித்த மதுபானங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம் மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.