• Jun 19 2025

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

Chithra / Jun 19th 2025, 1:11 pm
image


எலோன் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. 

இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் நாடு முழுவதும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கனவே நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டார்லிங்கின் வருகை, அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பை வழங்குவதன் மூலம், இலங்கையின் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இணைய அணுகல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத் தெரிவித்தார்.

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை எலோன் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கனவே நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார்லிங்கின் வருகை, அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பை வழங்குவதன் மூலம், இலங்கையின் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இணைய அணுகல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement