• May 01 2026

சவூதியில் சிக்கியுள்ள இலங்கைப் பெண் - மக்களிடம் அரசின் அவசர வேண்டுகோள்!

Chithra / May 1st 2026, 11:33 am
image

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, அவரது நெருங்கிய உறவினர்களைக் கண்டறிய உதவுமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.


சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


பம்பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த எஃப் ரிஹானா, எஃப். ரிம்சானி, ஃபாஹிமா ஆகியோரின் தாயான ரஹீமா சஹாப்தீன் (Mrs. Raheema Sahabdeen)  என்ற பெண்ணே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


ரஹிமா தற்போது நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களையும் வழங்க அவரால் இயலவில்லை.


அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கானபணிகளை முன்னெடுப்பதற்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது. 


திருமதி ரஹீமா சஹாப்தீனை இலங்கைக்குத் திருப்பி வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. 


எனினும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டறிய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.


எனவே, இவரைப் பற்றியோ அல்லது இவருடைய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பற்றியோ ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: +94 11 2338 812 / +94 11 2335 942 

மின்னஞ்சல்: consular@mfa.gov.lk


வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் எனவும், இந்த மனிதாபிமான முயற்சியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.


சவூதியில் சிக்கியுள்ள இலங்கைப் பெண் - மக்களிடம் அரசின் அவசர வேண்டுகோள் சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, அவரது நெருங்கிய உறவினர்களைக் கண்டறிய உதவுமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த எஃப் ரிஹானா, எஃப். ரிம்சானி, ஃபாஹிமா ஆகியோரின் தாயான ரஹீமா சஹாப்தீன் (Mrs. Raheema Sahabdeen)  என்ற பெண்ணே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.ரஹிமா தற்போது நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களையும் வழங்க அவரால் இயலவில்லை.அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கானபணிகளை முன்னெடுப்பதற்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது. திருமதி ரஹீமா சஹாப்தீனை இலங்கைக்குத் திருப்பி வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. எனினும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டறிய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.எனவே, இவரைப் பற்றியோ அல்லது இவருடைய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பற்றியோ ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: +94 11 2338 812 / +94 11 2335 942 மின்னஞ்சல்: consular@mfa.gov.lkவழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் எனவும், இந்த மனிதாபிமான முயற்சியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement