• Feb 20 2026

இமாலய வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி!

shanuja / Feb 12th 2026, 4:04 pm
image

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி-20 உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 


இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 


இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிவேக அரைசதமாகும். 


ஆரம்ப விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்ட போதிலும், குசல் மெந்திஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். குசல் மெந்திஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 


அதன்படி, 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 


அவ்வணி சார்பில் மொஹமட் நதீம் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 


பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இமாலய வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி-20 உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிவேக அரைசதமாகும். ஆரம்ப விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்ட போதிலும், குசல் மெந்திஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். குசல் மெந்திஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். அதன்படி, 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் மொஹமட் நதீம் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement