• Apr 14 2026

இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி

dorin / Apr 1st 2026, 7:25 pm
image

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. 


மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று  சந்தை கொடுக்கல் வாங்கல்களின் முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி பின்வருமாறு அமைந்தது. 


கொள்முதல் விலை: ரூ. 311.76 


விற்பனை விலை: ரூ. 319.31 


2026 பெப்ரவரி பிற்பகுதியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழலால் உருவான வெளிநாட்டுத் துறை அழுத்தங்களே, ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், 2025 நவம்பர் மாதம் முதல் காணப்பட்ட போக்கைத் தொடர்ச்சியாகப் பேணி, 2026 பெப்ரவரி மாதத்திலும் நடைமுறை கணக்கில் மேலதிகமாக பதிவாகியுள்ளது. 

அதற்கமைய, 2026 ஜனவரி-பெப்ரவரி காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்தத் திரண்ட மேலதிகம் 487 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

எவ்வாறாயினும், 2026 பெப்ரவரி மாதத்தின் அந்நிய செலாவணிச் சார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையின்படி, வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.1 பில்லியன் டொலராக இருந்த பற்றாக்குறை, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. 

தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 194 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்கான மொத்தச் செலவு 418 மில்லியன் டொலர்களாகும். 

சீன மக்கள் வங்கியுடனான பரிமாற்ற வசதியையும் உள்ளடக்கி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2026 பெப்ரவரி இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய வங்கி சந்தையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதை அதிகரித்தமையால் கையிருப்பு மட்டம் இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி  குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று  சந்தை கொடுக்கல் வாங்கல்களின் முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி பின்வருமாறு அமைந்தது. கொள்முதல் விலை: ரூ. 311.76 விற்பனை விலை: ரூ. 319.31 2026 பெப்ரவரி பிற்பகுதியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழலால் உருவான வெளிநாட்டுத் துறை அழுத்தங்களே, ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், 2025 நவம்பர் மாதம் முதல் காணப்பட்ட போக்கைத் தொடர்ச்சியாகப் பேணி, 2026 பெப்ரவரி மாதத்திலும் நடைமுறை கணக்கில் மேலதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கமைய, 2026 ஜனவரி-பெப்ரவரி காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்தத் திரண்ட மேலதிகம் 487 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எவ்வாறாயினும், 2026 பெப்ரவரி மாதத்தின் அந்நிய செலாவணிச் சார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையின்படி, வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.1 பில்லியன் டொலராக இருந்த பற்றாக்குறை, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 194 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்கான மொத்தச் செலவு 418 மில்லியன் டொலர்களாகும். சீன மக்கள் வங்கியுடனான பரிமாற்ற வசதியையும் உள்ளடக்கி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2026 பெப்ரவரி இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய வங்கி சந்தையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதை அதிகரித்தமையால் கையிருப்பு மட்டம் இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி  குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement