• May 23 2026

சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் கடன் – 13வது இடத்தில் இலங்கை

IMF
Chithra / Oct 21st 2025, 9:34 am
image


சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார் 162 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது. 

இதில், இலங்கை செலுத்த வேண்டியுள்ள தொகை 2.3 பில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கையைக் காட்டிலும் பாகிஸ்தான், ஈக்குவடோர், ஐவரி கோஸ்ட், கென்யா, பங்களாதேஷ், கானா, அங்கோலா, கொங்கோ மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளும் அதிகப்படியான கடனை சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்தவேண்டியுள்ளன. 

எனினும் இந்தக் கடன் பட்டியலில் ஆர்ஜென்டினா முதலிடத்தில் உள்ளது. 

அந்த நாடு 56.83 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் கடன் – 13வது இடத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார் 162 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது. இதில், இலங்கை செலுத்த வேண்டியுள்ள தொகை 2.3 பில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கையைக் காட்டிலும் பாகிஸ்தான், ஈக்குவடோர், ஐவரி கோஸ்ட், கென்யா, பங்களாதேஷ், கானா, அங்கோலா, கொங்கோ மற்றும் கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளும் அதிகப்படியான கடனை சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்தவேண்டியுள்ளன. எனினும் இந்தக் கடன் பட்டியலில் ஆர்ஜென்டினா முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு 56.83 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement