• May 22 2026

இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் - IMFஇன் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்!

IMF
Chithra / May 22nd 2026, 8:50 am
image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது. 


கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார். 


இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். 


சவாலான வெளிப்புறச் சூழலில் உள்ள பல பொருளாதாரங்களைப் போலவே, சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்களும் புதிய அழுத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. 


நிலைத்தன்மையான கொள்கை வழிமுறையைப் பேணுவதும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் சீரமைக்க தொடர்ந்து அனுமதிப்பதும், இதுவரை அடைந்துள்ள நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார். 


கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் முன்னோக்கி நகரும் வேளையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குவதாக என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் - IMFஇன் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது. கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சவாலான வெளிப்புறச் சூழலில் உள்ள பல பொருளாதாரங்களைப் போலவே, சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்களும் புதிய அழுத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. நிலைத்தன்மையான கொள்கை வழிமுறையைப் பேணுவதும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் சீரமைக்க தொடர்ந்து அனுமதிப்பதும், இதுவரை அடைந்துள்ள நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் முன்னோக்கி நகரும் வேளையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குவதாக என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement