• Feb 12 2026

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்!

shanuja / Feb 4th 2026, 12:25 pm
image

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.


குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.


வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவும் தவறான தகவல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறான நடவடிக்கைகளை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


சட்டவிரோத உள்ளடக்கத்திற்கு சமூக ஊடக நிர்வாகிகளை பொறுப்பேற்க வைப்பதற்கும், அல்கோரிதம் கையாளுதலை குற்றமாக்குவதற்கும், வலுவான வயது சரிபார்ப்பு அமைப்புகளை கட்டாயப்படுத்துவதற்கும் ஸ்பெயின் ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின் ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவும் தவறான தகவல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகளை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.சட்டவிரோத உள்ளடக்கத்திற்கு சமூக ஊடக நிர்வாகிகளை பொறுப்பேற்க வைப்பதற்கும், அல்கோரிதம் கையாளுதலை குற்றமாக்குவதற்கும், வலுவான வயது சரிபார்ப்பு அமைப்புகளை கட்டாயப்படுத்துவதற்கும் ஸ்பெயின் ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement