ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் இருந்து ஸ்மார்ட் சாவிகள் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரான துறைமுக ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த ஊழியர் ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்போது, அவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகைக்கு ஏற்ப ஒரு ஸ்மார்ட் சாவியை 6,000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், பல மாதங்களாக சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்துள்ள குறித்த ஊழியர், இதன்மூலம் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குருநாகலில் வசிக்கும் குறித்த தொழிலதிபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பல ஸ்மார்ட் சாவிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இருவரையும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: இருவர் கைது ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் இருந்து ஸ்மார்ட் சாவிகள் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரான துறைமுக ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதையடுத்து குறித்த ஊழியர் ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.விசாரணைகளின்போது, அவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகைக்கு ஏற்ப ஒரு ஸ்மார்ட் சாவியை 6,000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.மேலும், பல மாதங்களாக சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்துள்ள குறித்த ஊழியர், இதன்மூலம் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து குருநாகலில் வசிக்கும் குறித்த தொழிலதிபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பல ஸ்மார்ட் சாவிகள் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது, இருவரையும் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்