• May 02 2026

செம்மணி மனிதபுதைகுழி ஆறாம் நாள் அகழ்வு; இன்றும் இரு எலும்புக்கூடுகள்!

shanu / May 2nd 2026, 4:17 pm
image

செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு புதிதாக இரண்டு மண்டையோட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். 


அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்புகூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில் , தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே , அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும் , 7ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதபுதைகுழி ஆறாம் நாள் அகழ்வு; இன்றும் இரு எலும்புக்கூடுகள் செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு புதிதாக இரண்டு மண்டையோட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்புகூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில் , தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே , அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும் , 7ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement