• Aug 14 2026

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி; இராணுவ அங்கிக்குள் வெடிபொருட்கள் மீட்பு!

Chithra / Aug 9th 2026, 2:13 pm
image


யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


வீட்டு உரிமையாளர் குறித்த அங்கி தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார், குறித்த அங்கியை ஆய்வு செய்துள்ளனர்.


இதன்போது, இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி என்பதுடன், அதற்குள் நீண்ட நாள் பட்ட  வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி; இராணுவ அங்கிக்குள் வெடிபொருட்கள் மீட்பு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.வீட்டு உரிமையாளர் குறித்த அங்கி தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார், குறித்த அங்கியை ஆய்வு செய்துள்ளனர்.இதன்போது, இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி என்பதுடன், அதற்குள் நீண்ட நாள் பட்ட  வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement