• Sep 20 2026

அங்குருவாதொட்டவில் கூரிய ஆயுதத் தாக்குதல் 37 வயதுடைய நபர் பலி

dorin / Sep 19th 2026, 1:56 pm
image

அங்குருவாதொட்ட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஹல்தொட பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

நேற்று (18) இரவும் உயிரிழந்த நபர் தனது தாயைத் தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரைப் மீட்பதற்காக 35 வயதுடைய தம்பி மன்னாக் கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் தாக்குதலுக்கு இலக்கான தாயாரும் காயமடைந்து தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னரும் உயிரிழந்த நபர் தனது தந்தையைத் தாக்கி காயப்படுத்தியிருந்ததாகவும், தந்தையும் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபரான தம்பி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குருவாதொட்டவில் கூரிய ஆயுதத் தாக்குதல் 37 வயதுடைய நபர் பலி அங்குருவாதொட்ட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹல்தொட பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (18) இரவும் உயிரிழந்த நபர் தனது தாயைத் தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரைப் மீட்பதற்காக 35 வயதுடைய தம்பி மன்னாக் கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் தாக்குதலுக்கு இலக்கான தாயாரும் காயமடைந்து தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் உயிரிழந்த நபர் தனது தந்தையைத் தாக்கி காயப்படுத்தியிருந்ததாகவும், தந்தையும் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபரான தம்பி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement