• Jul 07 2026

நாரம்மலில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி மோதி 19 வயது இளைஞர் பலி

Chithra / Jul 6th 2026, 12:16 pm
image


குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைஇந்தத் துயரமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பாடசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியுடன் பயங்கரமாக மோதியுள்ளது.


இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞர், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை யாழில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆறுமுகம் ஏகானந்தசிவம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் கல்வியங்காட்டில் சாப்பாடு வாங்கிக்கொண்டு பருத்தித்துறை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.


இதன்போது வலதுபக்க வீதியால் செல்வதற்காக மத்தியகோடு நோக்கி பயணித்துள்ளார். இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார்.


அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


நாரம்மலில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி மோதி 19 வயது இளைஞர் பலி குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைஇந்தத் துயரமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பாடசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியுடன் பயங்கரமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞர், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை யாழில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆறுமுகம் ஏகானந்தசிவம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கல்வியங்காட்டில் சாப்பாடு வாங்கிக்கொண்டு பருத்தித்துறை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.இதன்போது வலதுபக்க வீதியால் செல்வதற்காக மத்தியகோடு நோக்கி பயணித்துள்ளார். இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார்.அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement