• Apr 16 2026

திருகோணமலைக்கு போர் கப்பலை அனுப்பியது தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சி .! இ.முரளிதரன் குற்றச்சாட்டு

Aathira / Mar 6th 2026, 4:45 pm
image

ஈரானின் போர்க்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியிருப்பது, தமிழ் மக்களையும் அமெரிக்க அரசாங்கத்தையும் பகைவர்களாக மாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சி என வடமாகாண காணிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ. முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் தற்போது போர் பதற்றம் நீடித்து வருவதாகவும், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஈரானின் இரண்டாவது போர்க்கப்பல் இலங்கையில் நங்கூரமிட அனுமதி கோரியிருந்தபோதும் ஆரம்பத்தில் எந்த அனுமதியும் வழங்காத அரசாங்கம், நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானிய போர்க்கப்பலில் இருந்த பணியாளர்களை கொழும்பில் தரையிறக்கி, பின்னர் அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்தது தமிழர்களையும் அமெரிக்காவையும் மோதலுக்கு தூண்டும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.

காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இருந்தபோதும் அவற்றைத் தாண்டி திருகோணமலை துறைமுகத்தில் போர்க்கப்பலை நிறுத்தியிருப்பது தமிழர்களுக்கு எதிரான மறைமுக அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

மேலும், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொழும்பில் இறக்கிய பின்னரும், ஏன் அந்தக் கப்பலை தமிழர் தாயகமான திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

திருகோணமலைக்கு போர் கப்பலை அனுப்பியது தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சி . இ.முரளிதரன் குற்றச்சாட்டு ஈரானின் போர்க்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியிருப்பது, தமிழ் மக்களையும் அமெரிக்க அரசாங்கத்தையும் பகைவர்களாக மாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சி என வடமாகாண காணிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ. முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.இன்றைய தினம் (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் தற்போது போர் பதற்றம் நீடித்து வருவதாகவும், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஈரானின் இரண்டாவது போர்க்கப்பல் இலங்கையில் நங்கூரமிட அனுமதி கோரியிருந்தபோதும் ஆரம்பத்தில் எந்த அனுமதியும் வழங்காத அரசாங்கம், நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஈரானிய போர்க்கப்பலில் இருந்த பணியாளர்களை கொழும்பில் தரையிறக்கி, பின்னர் அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்தது தமிழர்களையும் அமெரிக்காவையும் மோதலுக்கு தூண்டும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் இருந்தபோதும் அவற்றைத் தாண்டி திருகோணமலை துறைமுகத்தில் போர்க்கப்பலை நிறுத்தியிருப்பது தமிழர்களுக்கு எதிரான மறைமுக அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.மேலும், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொழும்பில் இறக்கிய பின்னரும், ஏன் அந்தக் கப்பலை தமிழர் தாயகமான திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement