இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளின் 40ஆவது நாளான இன்று (22), மேலும் 4 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது, இதுவரை அடையாளம் காணப்பட்ட 471 மனித எலும்புத் தொகுதிகளில் 455 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த மனித எலும்பு எச்சங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி: இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 471 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அகழ்வுப் பணிகளின் 40ஆவது நாளான இன்று (22), மேலும் 4 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது, இதுவரை அடையாளம் காணப்பட்ட 471 மனித எலும்புத் தொகுதிகளில் 455 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.அந்த மனித எலும்பு எச்சங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.