• May 23 2026

கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று, மழை; மக்களுக்கு வந்த எச்சரிக்கை! 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Chithra / Oct 24th 2025, 7:51 am
image

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, மண்சரிவு, கடல் கொந்தளிப்பு, மற்றும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்ட சிறப்பு எச்சரிக்கை இன்று  பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.

அதன்படி, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சில கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்குள், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அரபிக் கடல் வழியாக வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், முன்பு விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீட்டித்துள்ளது.

அதன்படி, பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் உள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், சாத்தியமான பேரிடர் நிலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு 

அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 14 மாவட்டங்களில் மக்கள் பலத்த மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 

480 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை அல்லது பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், மக்கள் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.


கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று, மழை; மக்களுக்கு வந்த எச்சரிக்கை 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, மண்சரிவு, கடல் கொந்தளிப்பு, மற்றும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்ட சிறப்பு எச்சரிக்கை இன்று  பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.அதன்படி, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சில கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.அடுத்த 24 மணிநேரத்திற்குள், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அரபிக் கடல் வழியாக வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், முன்பு விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீட்டித்துள்ளது.அதன்படி, பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் உள்ளது.இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், சாத்தியமான பேரிடர் நிலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.அத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 14 மாவட்டங்களில் மக்கள் பலத்த மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 480 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசரநிலை அல்லது பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், மக்கள் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement