• Sep 06 2026

பாடசாலைகள் மீண்டும் திறப்பு: டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்துகள் சேவையில்

Chithra / Sep 6th 2026, 4:10 pm
image


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.


இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.


அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.


பாடசாலைகள் மீண்டும் திறப்பு: டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்துகள் சேவையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement