• Feb 14 2026

சம்பள அதிகரிப்பு - பிரவுன்சிக் தோட்டத்தின் உள்ள ஆலயத்தில் பூஜைகள் செய்து ஜனாதிபதிக்கு நன்றி!

shanuja / Feb 13th 2026, 4:41 pm
image

1750 ரூபா சம்பளம் பெற்ற தோட்டத் தொழிலாளர்கள், மஸ்கெலியாவில் உள்ள பிரவுன்சிக் தோட்டத்தின் உள்ள ஆலயத்தில் பூஜைகள் செய்து, ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஆசி பெற்று, தங்கள் அன்றாட தொழிலினை ஆரம்பித்தனர் .


தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை செய்து தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாற்சோறு சமைத்து கேக் பகிர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.


இதில் கலந்துகொண்டு தொழிலாளர்கள் கூறுகையில் இதுவரை வந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன்படி ஏதும் நடக்கவில்லை எனவே தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது இத மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம் எனத் தெரிவித்தனர் .


பூஜையில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள், இது வரலாற்றில் போராடாமல் பெற்ற மிக உயர்ந்த சம்பளம் என்றும், அந்த சம்பளத்தை வழங்கியதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


சம்பள அதிகரிப்பு - பிரவுன்சிக் தோட்டத்தின் உள்ள ஆலயத்தில் பூஜைகள் செய்து ஜனாதிபதிக்கு நன்றி 1750 ரூபா சம்பளம் பெற்ற தோட்டத் தொழிலாளர்கள், மஸ்கெலியாவில் உள்ள பிரவுன்சிக் தோட்டத்தின் உள்ள ஆலயத்தில் பூஜைகள் செய்து, ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஆசி பெற்று, தங்கள் அன்றாட தொழிலினை ஆரம்பித்தனர் .தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை செய்து தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாற்சோறு சமைத்து கேக் பகிர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.இதில் கலந்துகொண்டு தொழிலாளர்கள் கூறுகையில் இதுவரை வந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன்படி ஏதும் நடக்கவில்லை எனவே தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது இத மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம் எனத் தெரிவித்தனர் .பூஜையில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள், இது வரலாற்றில் போராடாமல் பெற்ற மிக உயர்ந்த சம்பளம் என்றும், அந்த சம்பளத்தை வழங்கியதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement