நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மே தினக் கூட்டம் நடைபெறவுள்ள கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நேரில் விஜயம் செய்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
மே தினக் கூட்டத்தின் பிரதான மேடை அமைப்பு, அரங்கத் தயார்படுத்தல்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரிவான கவனம் செலுத்தினார்.
இந்த விஜயத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் பிரதேச மட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட சஜித் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மே தினக் கூட்டம் நடைபெறவுள்ள கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நேரில் விஜயம் செய்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.மே தினக் கூட்டத்தின் பிரதான மேடை அமைப்பு, அரங்கத் தயார்படுத்தல்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விரிவான கவனம் செலுத்தினார்.இந்த விஜயத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் பிரதேச மட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.