நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையால் கண்டி - அஸ்கிரிய பகுதியிலுள்ள வீதி உடைந்து அந்தப்பகுதி முழுவதும் பள்ளமாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கத்தால் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் கனமழை பதிவாகி வருகின்றது.
கனமழையால் நிலச்சரிவு, வெள்ள அபாயம், கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட எச்சரிக்கைகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கனமழையால் பல பகுதிகளில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கமையவே கண்டி - அஸ்கிரிய வீதி உடைந்து பள்ளமாகியுள்ளது.
இதனால் அந்த வீதியூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இது தவிர குறித்த வீதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் ஆபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடைப்பெடுத்து பள்ளமாகிய வீதி; சீரற்ற காலநிலையால் கண்டியில் அவலம் நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையால் கண்டி - அஸ்கிரிய பகுதியிலுள்ள வீதி உடைந்து அந்தப்பகுதி முழுவதும் பள்ளமாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கத்தால் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் கனமழை பதிவாகி வருகின்றது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ள அபாயம், கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட எச்சரிக்கைகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழையால் பல பகுதிகளில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கமையவே கண்டி - அஸ்கிரிய வீதி உடைந்து பள்ளமாகியுள்ளது. இதனால் அந்த வீதியூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இது தவிர குறித்த வீதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் ஆபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.